வவுனியாவில் புதையல் தோண்டியவர்களின் நிலை…!!
வவுனியா, கலாபோபஸ்வே, நந்தமித்தகம பகுதியில் புதையல் தோண்டிய ஏழுபேரை நாமல்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (04) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, கலாபோபஸ்வேவ, நந்தமித்த கம பகுதியில் உள்ள கற்பகுதிக்கு அண்மையில் புதையல் தோண்டுவதாக நாமல்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அந்த பகுதிக்கு சென்ற பொலிஸார் புதையல் தோண்டிய பெண் உட்பட்ட 7 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை வவுனியா நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வவுனியா, நாமல்கம பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.