சவுதி, ஏமன் நாடுகளில் நாளை ரம்ஜான் பண்டிகை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Read Time:2 Minute, 30 Second

201607051519421593_Gulf-Arab-countries-announce-start-day-of-three-day-Muslim_SECVPFரமலான் நோன்பு முடிந்ததன் நிறைவாக இஸ்லாமிய நாடுகளில் கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் ஷவ்வால் முதல்பிறை தினத்தன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

அவ்வகையில், இந்த (2016) ஆண்டின் ரமலான் நோன்பு இன்றுடன் நிறைவடைவதால் நேற்று (திங்கட்கிழமை) ஷவ்வால் மாதத்தின் முதல்பிறை மத்திய கிழக்கு நாடுகளில் தென்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றைய தினம் பிறை தோன்றவில்லை.

இதையடுத்து, சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட ஐக்கிய அமீரக நாடுகளில் நாளை (புதன்கிழமை) ஈதுல் பித்ர் எனப்படும் ரம்ஜான் திருநாள் கொண்டாடப்படும் என மேற்கண்ட நாடுகளின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஏமன், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் நாளை (புதன்கிழமை) ரம்ஜான் பண்டிகை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புவியியல் அமைப்புக்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டிலும் முதல்பிறை தோன்றுவதற்கேற்ப அந்நாடுகளில் ரம்ஜான் கொண்டாடப்படும். வழக்கமாக, சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட ஐக்கிய அமீரக நாடுகளில் ரம்ஜான் கொண்டாடிய மறுநாள்தான் இந்தியாவில் ரம்ஜான் கொண்டாடப்படும்.

அவ்வகையில், இந்தியாவில் நாளை மாலை முதல்பிறை தோன்றும். அதையடுத்து, வரும் 6-ம் தேதி (வியாழக்கிழமை) இங்கு ரம்ஜான் கொண்டாடப்படும் என தெரிகிறது. எனினும், தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களை பொருத்த வரையில் அந்தந்த மாநில அரசுகளின் ‘தலைமை காஜி’யின் அறிவிப்புக்கு இணங்க, அவர் குறிப்பிடும் நாளில்தான் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது என்பது, குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இராட்சத பாம்பை பிடித்து லுங்கியில் மடித்துக்கட்டும் மனிதர்… ஒருவேளை ரஜினி சார் பயிற்சியா இருக்குமோ? வீடியோ
Next post விபத்தின் பின் பாதசாரியின் சடலம் காரில் தொங்கிய நிலையில் ஒன்றரை கிலோமீற்றர் தூரம் தொடர்ந்து பயணித்த யுவதி…!!