கொழும்பு உட்பட பல பகுதிகளில் நீர் வெட்டு…!!
இன்று மாலை 06.00 மணி முதல் நாளை காலை 06 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு சில பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி தெஹிவளை – கல்கிசை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள், வௌ்ளவத்தை, கிருலப்பனை, பாமன்கடை, ஹெவலொக், கொள்ளுப்பிட்டிய ஆகிய இடங்களிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அம்பதல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தெஹிவளை நீர் வழங்கும் பகுதி வரை நீர் எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கோளாரே இதற்குக் காரணம் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.