By 5 July 2016 0 Comments

இந்­தி­யாவில் மீண்டும் ஒரு கொடூரம் ! ஒரு தலைக்­கா­தலால் பறி­போன மற்றோர் உயிர்…!!

17803Daily_News_8908306360245தமி­ழ­கத்தின் நுங்­கம்­பாக்கம் ரயில் நிலை­யத்தில் ஐ.ரீ. ஊழியர் சுவாதி படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் இந்­தியா மட்­டு­மன்றி உலகம் முழு­வதும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யது.

சுவா­தியைக் கொலை செய்த ராம்­கு­மார் கைது செய்­யப்­பட்டு எதிர்­வரும் 18 ஆம் திகதி வரை நீதி­மன்ற காவலில் வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­ர­விட்டுள்ளார்.

காத­லிக்க மறுத்து தோற்­றத்தை குறித்து விமர்­சனம் செய்­ததாலே சுவா­தியை கொலை செய்­த­தாக ராம்­குமார் வாக்­கு­மூலம் அளித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் இந்தப் பர­ப­ரப்பு அடங்­கு­வ­தற்கு முன்­ன­தா­கவே தெலுங்­கா­னா­விலும் காதலை ஏற்க மறுத்­ததால் இளம்பெண் ஒருவர் வீட்டு வாச­லி­லேயே படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

தெலுங்­கானா மாநிலம் அதி­பாபாத் மாவட்டம் பைன்பூர் கிரா­மத்தைச் சேர்ந்த சருபாய் என்­ப­வ­ரது மகள் சந்­தியா (19). இவர் தாயுடன் சேர்ந்து பீடி சுற்றும் வேலை பார்த்து வந்­துள்ளார்.

இவர்­க­ளது பக்­கத்து வீட்டில் வசித்து வரும் மகேஷ் (20), தனியார் கல்­லூ­ரியில் படித்து வரு­கிறார். இவர் சந்­தி­யாவை கடந்த ஓராண்­டாக ஒரு­த­லை­யாகக் காத­லித்து வந்­துள்ளார்.

ஆனால், அவரின் காதலை சந்­தியா ஏற்­க­வில்லை. இதனால் தொடர்ந்து சந்­தி­யாவைக் காத­லிக்­கும்­படி நச்­ச­ரித்து வந்­துள்ளார் மகேஷ். இது­கு­றித்து மகேஷ் மீது சந்­தியா பொஸிலும் முறைப்­பாடு செய்­துள்ளார்.

இந்­நி­லையில், சந்­தி­யா­விற்கு அவ­ரது குடும்­பத்­தினர் வரன் பார்த்­துள்­ளனர். விரைவில் அவ­ருக்கு திரு­மணம் நடத்த அவ­ரது பெற்றோர் திட்­ட­மிட்­டனர். பக்­கத்து வீடான மகே­ஷுக்கு இது குறித்து தெரிய வந்­ததும் அதிர்ச்சி அடைந்­துள்ளார்.

இதனால் நேற்று முன்­தினம் பகல் காய்­கறி வாங்­கு­வ­தற்­காக அருகில் இருந்த கடைக்குச் சென்ற சந்­தி­யா­விடம் அவர் தன் காதலை ஏற்­கும்­படி வற்­பு­றுத்­தி­யுள்ளார்.

ஆனால், அப்­போதும் மகேஷின் காதலை ஏற்க சந்­தியா மறுத்­துள்ளார். இதன்போது, ‘தனக்கு திரு­மண ஏற்­பாடு நடப்­பதால், தன் பின்னால் சுற்ற வேண்டாம்’ என்றும் அவர் கண்­டித்­துள்ளார்.

இதனால் ஆத்­தி­ர­ம­டைந்த மகேஷ், சந்­தி­யாவைப் பின் தொடர்ந்து ‘எனக்கு கிடைக்­காத நீ, வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது’ என கூறி, மறைத்து வைத்­தி­ருந்த கத்­தியால் சந்­தி­யாவின் கழுத்தை அறுத்துப் படு­கொலை செய்­துள்ளார்.

சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த சந்­தி­யாவின் தாய் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தக­வ­ல­றிந்து சம்­பவ இடத்­திற்கு விரைந்த பொலிஸார், தலை­ம­றை­வாக இருந்த மகேஷைத் தேடிச் சென்றனர். பின்னர் நேற்று முன்­தினம் மாலை மகேஷ் பொலிஸ் நிலை­யத்தில் சர­ண­டைந்தார். இதனையடுத்து அவ­ரிடம் பொலிஸார் விசா­ரணை நடத்தி வரு­கின்­றனர்.

கடந்த ஜன­வரி மாதம் சந்­தி­யாவின் நிச்­ச­ய­தார்த்­த­தையும் மகேஷ் தடுத்­துள்ளான் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஏற்­க­னவே பிரச்­சினை எழுந்த போது பொலிஸார் மகே­ஷுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­காமல் சமா­தானம் செய்து அனுப்பி வைத்­துள்­ளனர் என்றும் தெரி­ய­வந்­துள்­ளது.

அண்­மைக்­கா­லங்­க­ளாக இந்­தி­யா­வில் ஒரு­த­லைக்­கா­த­லுக்காக பெண்கள் கொலை செய்­ய­ப்பட்டு வரு­கின்ற கொடூ­ரத்­தன்மை அதி­க­ரித்து வரு­கின்­ற­தை அவ­தா­னிக்க கூடி­ய­தாக உள்­ளது.Post a Comment

Protected by WP Anti Spam