அடிக்கடி உடல் நோய்வாய்ப்படுவதை தடுக்கும் காளானைப் பற்றி தெரியுமா உங்களுக்கு?

Read Time:3 Minute, 46 Second

fever-04-1467630061நீங்கள் அல்லது உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி நோய்வாய்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் காய்ச்சல், ஜல தோஷம் என உள்ளதா? அப்படியெனில் இந்த கட்டுரை பதிவு உங்களுக்குதான்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் காளான் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு அதிகமாகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும் என கண்டறியப்படுள்ளது.

காளன் பற்றி உங்களுக்கு தெரியாதென்றால், அதனைப் பற்றி சில விஷயங்கள் இங்கே. இந்தியாவில் ஏராளமான காளான் வகைகள் உள்ளன. இது பாசி வகையை சார்ந்த தாவரம். இதில் பெரும்பாலும் விஷக் காளான் உள்ளன.

அதே போல் மிக அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட காளான்களும் உள்ளன. இவற்றுள் மூன்று வகையான காளான் சாப்பிடப்படுகின்றன. அவை மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான்.

இதில் ஒவ்வொரு காளானும் சிறந்த பயன்களைத் தருகின்றது. மூன்றுமே புற்று நோயை தடுக்கும் சக்தி கொண்டவை.

எய்ட்ஸ்க்கும் மருந்தாக -பயன்படுகிறது. குறிப்பாக வைக்கோல் காளான் நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்துகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

ஃப்ளோரிடா பல்கலைக் கழகத்தில் நடந்த காளான் பற்றிய ஆய்வில், நான்கு வாரங்கள் இந்த காளான் வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஒரு மாதத்தில் ஆரோக்கியம் மேம்படும் என்று நிரூபித்துள்ளார்கள்.

ஜப்பான் மற்றும் சைனாவில் சுமார் 21- 40 வயது வரை உள்ளவர்களை தினமும் காளான் உண்ண சொல்லியிருக்கிறார்கள் .

தொடர்ந்து நான்கு வாரம் அவர்கள் எடுத்துக் கொண்ட பின்னர் அவர்களின் செல்களை ஆய்வு செய்ததில், நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்கும் டி- செல் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆய்வில் பங்கு பெற்ற அனைவரும் சைவமாக இருக்கக் கூடாது. தேநீர் அருந்தக் கூடாது. ஏனெனில், காய்கறிகளிலும், தேநீரிலும் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் இருப்பதால், அவைகளுடன் காளான் சக்தியை ஒப்பீடு செய்வது கடினம்.

அதேபோல் காளானால் கொழுப்பை கரைத்து நோய் எதிர்ப்பு சக்தியை எந்த அளவு தரமுடியும் என சோதிக்க முடியாது என்று இவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆகவே காளானை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் கொழுப்பு குறையும்.

நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். புற்று நோயை தடுக்கும். இளமையை பாதுகாக்கும். இத்தகைய அற்புதங்களைக் கொண்ட காளானை ஓரங்கட்டாமல் உங்கள் சமைலில் சேர்த்திடுங்கள். அரோக்கியமான வாழ்க்கை கிடைக்கட்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணமாக போகும் பெண்களிடம் இருக்கும் பலவேறு அச்ச உணர்வுகள்…!!
Next post கலைஞர் கருணாநிதி மீது சந்தேகம்!! : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! – (பகுதி-2)