அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில் 12 வயதான சிறுமிகளின் திருமணத்தை தடுப்பதற்கு புதிய சட்டம்…!!

Read Time:4 Minute, 0 Second

17824ch2அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில் 12 வயதான சிறுமிகளும் திருமணம் செய்துகொள்வதை தடை செய்வதற்காக புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பெரும்பாலான மாநிலங்களில் சுய விருப்பத்துடன் திருமணம் செய்துகொள்வதற்கான குறைந்தபட்ச வயது 18 ஆகும். 16 வயதானவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். சில மாநிலங்களில் கர்ப்பமடைந்த சிறுமிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

எனினும் வேர்ஜீனியா மாநிலத்தில் 12, 13 வயதான சிறுமிகளும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்வதற்கு சட்டத்தில் இடமிருந்தது.

அண்மையில் நியூயோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் 65 வயதான மணமகனும் 12 வயதான மணமகளும் ஜோடியாக திருமணப் படப்பிடிப்பு நடத்தியபோது பலர் அந்நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச் சம்பவம் பரபரப்பை ஏற் படுத்தியிருந்தது.

ஆனால், அவர்கள் உண்மையான திருமண ஜோடியினர் அல்லர் என்பதும் அவர்கள் யூ ரியூப் நட்சத்திரமான கோபி பேர்சின் என்பவரின் ஏற்பாட்டில் திருமண ஜோடி போன்று நடித்தமையும் பின்னர் தெரியவந்தது.

12 வயதான சிறுமியை 65 வயதானவர் திருமணம் செய்யும்போது மக்களின் பிரதிபலிப்பு எப்படியிருக்கும் என்பதை பார்ப்பதற்காக கோபி பேர்சின் ஏற்பாடு செய்த நாடகம் அது.

எவ்வாறெனினும் தமது நாட்டில் ஒரு மாநிலத்தில் இவ்வாறான திருமணம் செய்துகொள்வதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது என்பதை அமெரிக்கர்கள் பலர் அப்போது உணர்திருக்கவில்லை.

இந்நிலையில் தற்போது வேர்ஜீனியா மாநிலத்தில் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதை 16 ஆக அதிகரிப்பதற்கு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

மாநில சட்டசபை உறுப்பினர்களான ஜெனிபர் மெக்லேலன், ஹோல்ட்ஸ் மன் வோஜெல் ஆகியோர் இந்த சட்டமூலத்துக்கான பிரேரணையை முன்வைத்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இச் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. ஜெனிபர் மெக்லேலன் இது தொடர்பாக கூறுகையில், எனது பாட்டியாரும் 1990களின் முற்பகுதியில், தனது 14 வயதில் திருமணம் செய்துகொண்டவர் தான்.

ஆனால், குறைந்த வயது திருமணங்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்த ஆதாரங்கள் வெளிவருவதற்கு முன்னர், சமூக ரீதியாக இத்தகைய திரு மணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட காலத்தில் அத் திருமணம் நடைபெற்றது.

எனினும், தற்போது சிறுவர் பாதுகாப்புக் கொள்கைகளுக்கு இசைவான புதிய சட்டங்கள் அவசியமாகின்றன” எனத் தெரிவித்துள்ளார். வேர்ஜீனியாவில் 2004 முதல் 2013 வரை 18 வயதுக்கு குறைந்த 4500 பேர் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இவர்களில் சுமார் 200 பேர் 15 வயதுக்குட்பட்டவர்கள் என மாநில சுகாதார திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பஸ் கட்டணம் திருத்தம் : இன்றும் கலந்துரையாடல்…!!
Next post சப்பாத்துக்குள் படமெடுத்து வந்த பாம்பு…. இனி சப்பாத்து அணியும் போது உஷாராக இருங்க…!! வீடியோ