அபார உடற்கட்டினால் பல்லாயிரக் கணக்கானோரைக் கவர்ந்த ஈரானிய இளைஞர்…!!

Read Time:2 Minute, 20 Second

178262ஈரானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது அபார உடற்கட்டின் மூலம் பல்லாயிரக்கணக்
கானோரைக் கவர்ந்து ள்ளார்.

ஐ.எஸ். தீவிரவாதிகளை தோற்கடிப்பதற்காக தான் சிரியாவுக்கு செல்ல விரும்புவதாகவும் இவர் கூறுகிறார்.

சஜாத் கரீபி எனும் இந்த இளைஞர் 24 வயதானவர்.

ஈரானின் புஷேஹ்ர் நகரைச் சேர்ந்தவர். தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபடும் சஜாத் கரீபியின் கைகளின் பைசெப்ஸ் தசைகளின் சுற்றளவு 22 அங்குலமாகும்.

அவரால் 175 கிலோகிராம் (386 இறாத்தல்) வரையான எடையைத் தூக்க முடியுமாம்.

‘நான் சஜாத் கரீபி. எனது நாட்டுக்கு நான் ஒரு சிப்பாய். ஈரானின் தூய மண்.’ என தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார் சஜாத் கரீபி.

அமெரிக்க கொமிக்ஸ் சுப்பர் ஹீரோ பாத்திரமான ‘ஹல்க்’ போன்ற தோற் றத்தை சஜாத் கொண்டிருப்பதால் அவர் ஈரானிய ஹல்க் என வர்ணிக்கப் படுகிறார்.

இன்ஸ்டகிராம் சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை வெளியிடு வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் சஜாத்.

சமூக வலைத்தளங்களில் பாரசீக மொழியில் அவர் பதிவுகளை வெளியிடு கின்ற போதிலும் ஆங்கிலத்தில் #strongman, #strongbody, #muscles, #big, and #powerful போன்ற ஹேஷ்டெக்குகளை அவர் இணைத்து வெளியிடுகிறார்.

தற்போது 90,000 இற்கும் அதிகமான ரசிகர்களை அவர் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானில் நடைபெற்ற உடற்கட்டுப் போட்டிகள் பலவற்றில் சஜாத் கரீபி பங்குபற்றியுள்ளார். ஈரானின் சார்பாகவும் போட்டிகளில் பங்குபற்றுகிறார்.

ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக போராடுவதற்காக ஈரானுக்கு செல்ல விரும்பு வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பப்பையில் இருந்து டாக்டரின் கையைப் பிடித்து இழுத்த வினோத குழந்தை…!!
Next post பின்நோக்கி வந்த ட்ரக்…. கண்டுக்காமல் வந்த பைக்! நடந்த அதிச்சியான விபத்து…!! வீடியோ