பஸ் கட்டணம் திருத்தம் : இன்றும் கலந்துரையாடல்…!!
வருடாந்த பஸ் கட்டணம் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியிற்கும் தனியார் பஸ் சங்கத்திற்கும் இடையில் இன்று இரண்டாம் முறையாகவும் கலந்துரையாடல் நடைப்பெறவுள்ளது.
இன்று நண்பகல் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளும் கலந்துக்கொள்வார்கள் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.
பஸ் கட்டணம் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் இடையில் கடந்த ஞாயிற்றுகிழமை விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
அதன் தொடராகவே இன்று இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பஸ் கட்டணம் திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானமும் இன்றைய தினம் மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.