கிங் கங்கை நீரில் மூழ்கி இருவர் பலி…!!
காலி கிங்தொட நதி முகத்துவாரத்தில் நீராடச் சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரத்கம பகுதியினை சேர்ந்த 18 மற்றும் 28 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தின் போது மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கியதாகவும், அவர்களில் ஒருவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்படடுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.