By 7 July 2016 0 Comments

சேலம் அருகே கல்லூரி மாணவி மர்மச்சாவு: காதலனுக்கு எழுதிய உருக்கமான கடிதம்…!!

201607061322515806_college-girl-student-mystery-dead-near-salem_SECVPFசேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கீரிப்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன். கூட்டுறவு சங்க செயலாளர். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 23).

இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.ஏ.படித்து வந்தார். தினமும் வீட்டில் இருந்து கல்லூரி பஸ்சில் கல்லூரிக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கல்லூரி பஸ்சில் பிரியதர்ஷினி கல்லூரிக்கு புறப்பட்டார். அந்த பஸ் நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டையை அடுத்த ஈஸ்வரமூர்த்தி பாளையம் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது பஸ்சில் இருந்து மர்மமான முறையில் கீழே விழுந்த பிரியதர்ஷினி சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார். இது குறித்து மங்களபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே மாணவி கைப்பட எழுதிய 5 பக்க கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் அதே கல்லூரியில் படிக்கும் வாலிபர் ஒருவரை பிரியதர்ஷினி காதலித்ததாகவும், மனைவி போல வாழ்ந்து விட்டு தற்போது காதலன் கைவிட்டதால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் பரபரப்பு தகவலை எழுதியுள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில் உள்ள முழு விவரம் வருமாறு:-

டியர் அரவிந்த், என்னை எந்த வார்த்தையெல்லாம் பேச கூடாதோ, அந்த வார்த்தையெல்லாம் நீ பேசிட்ட, இருந்தாலும் எனக்கு உன் மேல இருந்த லவ் குறையல, நீ எந்த அளவுக்கு உன் குடும்பத்து மேல பாசம் வச்சிருக்கியோ, அதே அளவு நான் உன் மேல வைச்ச லவ் உண்மை, அதை என்னால் மறக்க முடியல, என் லவ்வ கடைசி வரைக்கும் நீ புரிஞ்சிக்கல, ஆனா இப்போ என்னோட உயிர கொடுத்து என் லவ்வ நிரூபிக்க போறேன்.

இவ்வளவு நாள் சேர்ந்து சுத்தினோம், ஜாலியா என்ஜாய் பன்னினோம், அது மட்டும் லவ் இல்ல, எந்த பிரச்சனை வந்தாலும் எதிர் கொள்ள வேண்டும், அந்த தைரியம் உன்கிட்ட இல்லப்பா, இருந்தாலும் உன் கூட நான் வாழ்ந்த நாட்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாது.

நான் செத்துட்டா என் கல்லறையில் கூட நம்ம ஞாபகம் அழியாதுடா, அந்த அளவுக்கு நான் உன் மேல வச்சப்பாசம், என் லவ்வை நீ புரிஞ்சுக்கும் போது அத நான் பார்த்து சந்தோ‌ஷப்பட முடியாது, ஏனா நீ இதை படிக்கும் போது நான் உயிரோடு இருக்க மாட்டான்.

உன் கூட உன் பொண்டாட்டியா ஒரு நாள் வாழ்ந்துட்டேன், அது போதும், இந்த ஜென்மத்துல அந்த சந்தோ‌ஷத்தோட நான் போறேன்டா, எப்போது நான் இருந்த இடத்தில் இன்னொருத்திய உன்னால் நினைக்க முடியுமுன்னு நீ நீனைச்சியோ அப்போதே செத்துட்டேன், இது வெறும் பொணம், இப்ப சாகுறது நீ கவலைப்படத்தான், நீ ஆசைப்பட்ட மாதிரி நல்ல பொண்ணு உன் வாழ்க்கையில் கிடைக்கும்.

நான் செத்துட்டா கூட நீ சந்தோ‌ஷமா வாழறதை நான் பார்ப்பேன்டா, வாழ்க்கையில் அம்மா, அப்பா, ரொம்ப முக்கியம், பத்திரமா பாத்துக்க அவங்கள, இது என்னோட கடைசி கடிதம், இனிமே என்னை நீ பார்க்கணும்னு நினைச்சி எவ்ளோ அழுதாலும் நான் வரமாட்டேன்டா, ஏன்னா? உன்னை விட்டு ரொம்ப தூரம் போயிருப்பேன்.

திரும்ப வாழ முடியாத தூரம் நான் போறேன்டோ… வாழக்கையில் என்னோட நிலைமை இன்னொரு பெண்ணுக்கு வரக்கூடாது, தயவு செய்து அந்த வலிய அவளுக்கு கொடுத்திடாத, இது என்னோட அன்பான வேண்டுகோள், அந்த வலியை தாங்க முடியாம தான் இந்த உலகை விட்டு போறேன், பை, நல்லா உன்னை பார்த்துக்கோ,

உன்னை ரொம்ப விரும்புறேன், உன்னை மிஸ் பன்றேன் தங்கம், கடைசி முத்தம்… எனக்கு இந்த உலகத்துல எல்லாம் நீதான், நீயே என்னை விட்டு போனதுக்கு அப்புறம் நான் மட்டும் வாழ்ந்து என்ன பன்ன போறேன்டா… நான் போறேன்டா அம்மு…,

உனக்கு ஒரு கவிதை பிரிந்து போ என்று சொல்லாதே , பிரிவு என்ற சொல்லுக்கு முன்னால் எதுவும் கொடுக்க முடியல, அதனால் தான் இதயத்தை உன் நினைவுகளுக்கு எழுதி வைத்து விடடு என் உயிரை நெருப்பிற்கு இரையாக்கி விட்டேன். இவ்வாறு அந்த கடிதத்தில் உருக்கமாக எழுதப்பட்டுள்ளது.

மாணவி மர்மமான முறையில் இறந்ததை விபத்து வழக்காக பதிவு செய்து மங்களபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே மாணவி எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியதால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Post a Comment

Protected by WP Anti Spam