இத்தாலியிருந்து வந்த தமிழர் ஒருவருக்கு நேர்ந்த அவலம்…!!

Read Time:4 Minute, 28 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90இத்தாலியிலிருந்து இலங்கை வந்த நபர் ஒருவரை ஆயுதமுனையில் கடத்திய சம்பவமொன்று சிலாபம், வட்டக்காளியில் இடம்பெற்றுள்ளது.

நோய்வாய்ப்பட்டிருக்கும் தனது தாயை பார்ப்பதற்காக இத்தாலியில் நீண்ட காலமாக தொழில்புரியும் இலங்கையரான சுரேஷ் என்பவர் கடந்த 23ம் திகதி இலங்கை வந்துள்ளார்.

ஆயுதமுனையில் நள்ளிரவு கடத்திச் சென்ற மூவர் 7000 யூரோவை வழங்குமாறும் 7000 யூ​ரோவை தருவதாக ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டு தருமாறும் அச்சுறுத்தியதுடன் மிக மோசமாக தாக்கியுள்ளனர்.

துப்பாக்கியை வாய்க்குள் திணித்து அச்சுறுத்தி கடிதத்தில் கையெழுத்து இட்டு எடுத்துக் கொண்டு மூவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

கடந்த 3ம் திகதி நள்ளிரவு சுமார் 10.30 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த நபர்கள் இவரை ஆயுத முனையில் கடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக சுரேஷ் கூறுகையில்

1992ம் ஆண்டு இத்தாலிக்குச் சென்ற நான் நீண்ட நாட்கள் இலங்கைக்கு வரவில்லை.மனைவி, இரண்டு பிள்ளைகளுடன் இத்தாலியில் வசிக்கும் நான் தாயின் உடல் நிலை தொடர்பாக அறிவதற்காக வந்தேன்.

அன்று இரவு 10.30 மணியளவில் மூன்று பேர் வீட்டுக்குள் நுழைந்து என் தலையில் துப்பாக்கியை வைத்து அழுத்தி என்னை இழுத்துச் சென்றார்கள். எங்கே போகிறோம் எனக் கேட்ட போது நீர்கொழும்பு பொலிஸுக்கு என்று கூறினார்கள்.

வந்தவர்களில் ஒருவர் இத்தாலியில் இருக்கும் போது மிகவும் பரீட்சயமானவர். வாகனத்தினுள் என்னை அழைத்துச் சென்றவர்கள்.சிலாபம் நொயிஸ் வீதியில் வாகனத்தை நிறுத்தி 7000 யூரோவை கபில என்பவருக்கு தருவதாக எழுதித்தந்தால் உயிருடன் விடுவோம் இல்லையேல் சுட்டுக் கொன்று விடுவோம் என அச்சுறுத்தினர்.

முடியாது என்றேன். சுட்டுக் கொல்வதாகக் கூறி வாய்க்குள் துப்பாக்கியைத் திணித்து என்னை மிக மோசமாக தாக்கினார்கள்.

எனது சட்டத்தரணியிடம் பேச வேண்டும் என்று கூறினேன் பேச அனுமதித்தார்கள். முதலில் கடிதத்தை எழுதிக் கொடு பின்னர் பார்த்துக் கொள்வோம் என சட்டத்தரணி கூறினார்.

இதன்படி கையெழுத்திட்டுக் கொடு த்ததும் என்னை மீண்டும் வீட்டில் விட்டு விட்டுச் சென்றனர். அச்சம் காரணமாகவும் வருத்தம் காரணமாகவும் தூங்கிவிட்டேன்.

காலையில் 119 இலக்கத்துக்கு அழைத்து நடந்த அனைத்தையும் கூறினேன். சிலாபம் பொலிஸார் வந்து என்னிடம் வாக்குமூலம் பெற்று ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் என சுரேஷ் தெரிவித்தார்.

இவரது வாக்குமூலத்தின் படி கபில என்ற சந்தேக நபர் 5ம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றைய இருவரையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.

கபில என்ற நபருக்கும் சுரேஷுக்கும் இத்தாலியில் தொடர்புகள் இருந்துள்ளதாகவும் கபிலவின் நடவடிக்கைகளில் திருப்தியில்லாத காரணத்தினால் அவருடன் உள்ள தொடர்புகளை சுரேஷ் கைவிட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காண்பவர்களை சுண்டி இழுக்கும் லண்டன் பாஸ்ட் புட் ஸ்பெஷல்… Duck Meat Burger…!! வீடியோ
Next post சிங்கள, முஸ்லிம் மக்களை வடக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கை தீவிரம்..!!