உந்துருளி விபத்தில் 20 வயது இளைஞர் சாவு…!!
கொழும்பு – ஹொரணை பிரதான வீதியில் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற உந்துருளி விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த நான்கு பேரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் அதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் பொரலஸ்கமுவ கடுவாவல பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது.
உந்துருளிகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.