சீன வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்…!!
சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்நிலையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த விஜயம் இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை இலங்கை வரும் சீன வெளியுறவு அமைச்சர் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவை சந்திப்பதுடன், பிரதமர் மற்றும் ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளார்.
இதேவேளை இவரின் விஜயம் பெரும்பாலும் போட்சிட்டியின் மீள் ஆரம்பம் தொடர்பிலானதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்தாண்டு இரண்டாவது முறையாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கான தனது விஜயத்தினை மேற்கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.