இலங்கை போலீஸாருக்கு தமிழகத்தில் பயிற்சி: சட்டசபையில் மதிமுக எதிர்ப்பு

Read Time:3 Minute, 21 Second

Vaiko-Kannappan.jpgகோவையில் உள்ள மத்திய பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில், இலங்கையை சேர்ந்த 54 போலீஸாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு சட்ட சபையில் மதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சட்டசபையில் இன்று மதிமுக உறுப்பினர் கணணப்பன் பேசுகையில், இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகிறார்கள். இந் நிலையில், கோவையில் உள்ள மத்திய அரசின் பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில், இலங்கை ஆயுதப் படை போலீஸார் 54 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

இதைத் தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழர்கள் மனதில் வேதனையே மிஞ்சும் என்றார்.

இதற்குப் பதிலளித்த முதல்வர் கருணாநிதி, பயிற்சிக்கு வாருங்கள் என்று தமிழக அரசு அவர்களை அழைக்கவும் இல்லை, இங்கு பயிற்சி எடுக்க அனுமதி அளிக்கவும் இல்லை. இங்கு தெரிவிக்கப்பட்டஉறுப்பினரின் உணர்வுகளை மத்திய அரசு கவனத்தில் கொள்ளும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.

ராமதாஸ் கடும் கண்டனம்:

இதேபோல பாமக நிறுவனர் ராமதாஸும், இலங்கை போலீஸாருக்கு கோவையில் பயிற்சி கொடுப்பதை கடுமையாக எதிர்த்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

அமைதிப் பேச்சுவார்த்தையை இலங்கை அரசு திட்டமிட்டு குலைத்துப்போட்டு விட்டது. தமிழர் பகுதிகள் மீது போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது.

இந் நிலையில் இலங்கை ஆயுதப் படையைச் சேர்ந்த போலீஸார் கோவை வந்துள்ளதாகவும், அங்கு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

தமிழர்கள் அனைவருக்கும் இது அதிர்ச்சியான செய்தி என்பதில் சந்தேகம் இல்லை. ஈழத் தமிழ்களை நசுக்கி வரும் சிங்கள அரசுக்கு எந்த உருவத்திலும் உதவக் கூடாது என்பது இங்குள்ள தமிழர்கள் மட்டுமல்ல உலகில் உள்ள அத்தனை தமிழர்களின எண்ணமும் ஆகும்.

எனவே பயிற்சிக்காக கோவை வந்திருக்கும் இலங்கை போலீஸாரை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும். மத்திய பாதுகாப்பு அமைச்சரோடு தொடர்பு கொண்டு இந்தக் கோரிக்கையை பாமக எம்.பிக்கள நேரில் வலியுறுததுவார்கள் எனறு கூறியுள்ளார் ராமதாஸ்.
Vaiko-Kannappan.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நெற்றிக்கண்ணுடன் அதிசயக் குழந்தை உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் போராட்டம்
Next post இந்தியக் கூந்தலுக்கு லண்டனில் செம மவுசு!