ஒரே ஒரு புடவையை வைத்து விவாகரத்து கேட்ட தம்பதியை ஒன்றிணைந்த நீதிபதி…!!

Read Time:2 Minute, 7 Second

07-1467891816-saree577விவாகரத்து வழக்கை விசாரித்த மத்திய பிரதேச நீதிபதி ஒருவர், மனைவிக்கு புடவை வாங்கி தருமாறு கணவருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம், கார்கோன் நீதிமன்றத்தில்தான் இந்த விசித்திர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சஞ்சு-ராணு ஆகிய இருவரும், கணவன் மனைவி. தன்னை கணவன் கவனிப்பதில்லை என்றும், வீட்டில் தனிமையை உணர்வதாகவும் கூறி ராணு விவாகரத்து மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்தபோது, இருவருக்கும் கவுன்சலிங் தரப்பட்டது. ராணுவின் மனநிலையை கவுன்சலிங் மூலம் அறிந்து கொண்டார் நீதிபதி கங்காச்சரன் தூபே.

இதையடுத்து, மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சஞ்சுவை அழைத்து, ராணுவை ஷாப்பிங் கூட்டி சென்று புதிய புடவை வாங்கித் தர வேண்டும். அடுத்த விசாரணையின் போது ராணுவை கவரும் வகையில் பேச வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதேபோன்று, சஞ்சு, தனது மனைவிக்காக புதிய புடவை ஒன்றை வாங்கிக் கொடுத்து, நீதிபதி முன்னிலையில்,

“நீ இந்த புடவையில் மிகவும் அழகாக இருக்கிறாய்” என கூறி காதல் வசனம் பேசியுள்ளார். தினமும் கடுமையாக உழைக்கும் பெண் ஆதரவாக வேண்டுவது பாசமும், பாராட்டும் மட்டுமே என கூறிய நீதிபதி, ராணு தற்போது மகிழ்வாக உள்ளதாக கூறி, விவாகரத்து வழக்கை முடித்து வைத்துள்ளார். விவாகரத்து வழக்கை ஒரே ஒரு புடவையை கொண்டே முடித்து வைத்துள்ளார் நீதிபதி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி… பயணிக்கு உடல்நிலை பாதிப்பு…!!
Next post நாயை மாடியிலிருந்து வீசிய மாணவர்கள்… திரிஷாவுக்கு வந்ததே உச்சக்கட்ட கோபம்…!! வீடியோ