இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர்…!!
இந்தியாவின் வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் எதிர்வரும் ஆகஸ்ட்டில் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார்
இந்திய ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
அண்மையில் இந்தியாவுக்கு சென்றிருந்த இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, நிர்மலா சீத்தாராமனை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்
இந்தநிலையிலேயே நிர்மலாவின் விஜயம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை இந்திய எட்கா உடன்படிக்கை எதிர்வரும் மாதங்களில் கைச்சாத்திடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்ற நிலையிலேயே இந்திய அமைச்சரின் விஜயமும் இடம்பெறவுள்ளது.