பள்ளிவாசலுக்குள் கொலை – இருவர் கைது..!!
மூதூர் – ஜின்னாநகர் முஸ்லிம் பள்ளிவாசலுக்குள் நபர் ஒருவரை மூன்று பேர் சேர்ந்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, நீண்டகால பகையே குறித்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள பொலிஸார், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களினால் இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதனையடுத்து இரண்டு சகோதரர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவகின்றமை குறிப்பிடத்தக்கது