திருவனந்தபுரம் அருகே வீடு புகுந்து கம்யூ. நிர்வாகி வெட்டிக்கொலை: மனைவி கவலைக்கிடம்…!!

Read Time:3 Minute, 33 Second

201607081539033662_Communist-administrator-murder-near-thiruvananthapuram_SECVPFதிருவனந்தபுரம் அருகே உள்ள கோவளம் பகுதியை சேர்ந்தவர் மரியதாசன் (வயது 45). இவர் அந்த பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொறுப்பாளராக இருந்துவந்தார்.

மேலும் தனது வீடு அருகே மரியதாசன் மளிகை கடையும் நடத்தி வந்தார். இவரது மனைவி ஜிஷா (41). இந்த தம்பதிக்கு ஆன்சி (16) என்ற மகளும் அபைதாஸ் (14) என்ற மகனும் உள்ளனர்.

இரவு வீட்டில் உள்ள தனித்தனி அறைகளில் கணவன், மனைவியும், பிள்ளைகளும் தூங்கினார்கள். மறுநாள் காலையில் எழுந்த ஆன்சியும், அபைதாசும் தங்களது பெற்றோர் அறைக்கு சென்றனர்.

அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை உறைய வைப்பதாக இருந்தது. படுக்கை அறையில் மரியதாசனும், ஜிஷாவும் ரத்தவெள்ளத்தில் கிடந்தனர்.இதை பார்த்து அவர்கள் 2 பேரும் அலறினார்கள். அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர்.

பிறகு ஆம்புலன்ஸ் மூலம் மரியதாசனும், ஜிஷாவும் அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் மரியதாசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜிஷாவை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோவளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மரியதாசனின் வீட்டிற்கு சென்று போலீசார் பார்வையிட்டனர். அப்போது அந்த வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவில் யாரோ மர்ம மனிதர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து கணவன், மனைவியை வெட்டி உள்ளனர்.

மேலும் ஜிஷா அணிந்திருந்த தங்க நகைகளையும் அவர்கள் கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்று உள்ளனர். இதுபற்றி மரியதாசனின் பிள்ளைகளிடம் போலீசார் விசாரித்த போது தங்களுக்கு எந்த சத்தமும் கேட்கவில்லை என்று கூறி உள்ளனர்.

மேலும் பக்கத்து வீட்டாரிடம் விசாரித்த போது அந்த பகுதியில் உள்ள ஒரு தோப்பில் சிலர் மது அருந்திவிட்டு காசு வைத்து சூதாடி உள்ளனர். இதுபற்றி மரியதாசன் போலீசில் புகார் செய்து உள்ள தகவல் வெளியானது. அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் அந்த கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதா? அல்லது வேறு காரணத்திற்காக இந்த கொலை நடந்ததா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கம்யூனிஸ்டு நிர்வாகி கொலைக்கு அந்த கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகளை கிண்டல் செய்த கும்பலை தட்டிக்கேட்ட தந்தை அடித்துக்கொலை…!!
Next post போரடிக்கிற வாழ்க்கையை சுவாரஸ்யமாக மாற்ற சின்ன சின்ன ட்ரிக்…!!