3000 மாணவர்களுக்கு பாடசாலை இல்லை…!!
இலங்கையில் இந்த வருடத்தில் மாத்திரம் 3000 மாணவர்களுக்கு பாடசாலை அனுமதி கிடைக்காமல் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மீகாதென்ன பாடசாலையில் அண்மையில் ஏற்பட்ட குழப்பநிலைகளே பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதில் உள்ள சிக்கல் நிலையினை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாடசாலையில் தரம் ஒன்றிட்கு சேர்த்துக்கொள்ளும் நடவடிக்கையில் பெற்றோரை கைது செய்வது தவறான செயல் என்றும் தெரிவித்த அவர் பிரதி அமைச்சர் தெவரப்பெருமவின் சம்பவம் தொடடடர்பில் சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்து குறித்த பெற்றோர்களை பொலிஸார் கைதுசெய்திருப்பதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
மேலும் பிரதி அமைச்சரின் நடவடிக்கைகளுக்கு பின்புலத்தை ஆராய்வோமானால் தரம் ஒன்றிட்கு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளும் நடைமுறைகளில் உள்ள சிக்கல்களே இதற்கான காரணமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.