திருகோணமலையில் ஊசலாடும் இளைஞர்களின் உயிர்…!!
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலப்பையாற்று பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (8) மாலையில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் ஒரு இளைஞன் பலியானதுடன் மற்றும் மூவர் படு காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர கிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை, நாச்சிக்குடா பிரதேசத்தைச் சோ்ந்த 21 வயதுடைய எம்.தாஹா பவாஸ் என்பவரே பலியானவராவார். 21 வயதுடைய முகம்மது சாதிக் , 20 வயதுடைய முகம்மது நிலூபா் மற்றும் 21 வயதுடைய எம்.பி.எம்.கியாஸ் ஆகிய மூன்று இளைஞர்களே படுகாயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
நான்கு நண்பா்கள் இரு மோட்டார் சைக்கிளில் குச்சவெளி பிரதேசத்தை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்த போது, இரு மோட்டார் சைக்கிளும் ஒன்றோடு ஒன்று இணையப்பட்ட நிலையில் மின் கம்பம் ஒன்றில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்பலியானவரின் சடலம் திருகோணமலை குச்சவெளி கிராமிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும். விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை குச்சசெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.