340 ஒளி ஆண்டு தூரத்தில் 3 சூரியன்களுடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் சாதனை…!!

Read Time:1 Minute, 36 Second

201607091024220062_discovered-planet-with-3-suns-facing-potential-annihilation_SECVPF340 ஒளி ஆண்டு தூரத்தில் 3 சூரியன்களுடன் கூடிய புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஐரோப்பியன் சதர்ன் அப்சர்வேட்டரி (இ.எஸ்.ஓ.) எனப்படும் விண்வெளி அறிவியல் அமைப்பு சிலி நாட்டில் உள்ள நிலையத்தில் ஸ்பியர் எனப்படும் அதி நவீன புதிய கருவி நிறுவியுள்ளது. அதில் மிகப்பெரிய டெலஸ்கோப் பொருத்தப்பட்டுள்ளது.

அதன் உதவியுடன் விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். அதற்கு எச்.டி. 131399 ஏபி என பெயரிட்டுள்ளனர்.

இக்கிரகம் 3 சூரியன்களை கொண்டது. இங்கு தினமும் 3 சூரிய உதயங்களும், 3 சூரிய அஸ்தமனங்களும் நடைபெறுகிறது. இது பூமியில் இருந்து 340 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது.

இந்த கிரகம் 16 மில்லியன் வயது உடையது என கணிக்கப்பட்டுள்ளது. இங்கு 580 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது. வியாழன் கிரகத்தை விட 4 மடங்கு பெரியது. எடையும் 4 மடங்கு அதிகமாக உள்ளது.

சூரியனைவிட 80 சதவீதம் அளவு பெரியதாக உள்ளது. இது ஸ்பியர் கருவியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட முதல் தூர கிரகம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 5 போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்றவரை வெடிகுண்டு ரோபோவை அனுப்பி தீர்த்துக்கட்டிய அமெரிக்க போலீஸ்…!!
Next post உங்கள் வீட்டில் ஈக்கள் தொல்லையா? விரட்டியடிக்க இதோ ஒரு சூப்பர் டெக்னிக்…!! வீடியோ