மர்ம நபர் தற்கொலை..நடந்தது என்ன?
ரம்புக்கன மற்றும் கடிகமுவ புகையிரத நிலையங்களுக்கு இடையே நபரொருவர், புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து இன்று காலை கண்டி நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் பாய்ந்து இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த நபர் 50 தொடக்கம் 60 வயதுக்கு இடைப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவரது அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், சடலம் கடுகன்னாவ மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.