புதுவையில் சிகிச்சை பெற்ற 13 வயது சிறுமிக்கு, டாக்டர் பாலியல் தொல்லை…!!
புதுவை நெல்லித்தோப்பு பகுதியில் தனியார் ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது. இங்கு 13 வயது சிறுமி ஒருவர் உடல்நலம் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது டாக்டர் ஒருவர் தன்னிடம் பாலியியல் ரீதியாக தவறாக நடந்ததாக அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோரும் உறவினர்களும் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அவர்களை ஆஸ்பத்திரி ஊழியர்கள் உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர்.
அப்போது அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சிறுமியின் உறவினர்கள் ஆஸ்பத்திரியின் முன்பக்க கண்ணாடி கதவை உடைத்தனர்.
மேலும் அங்கிருந்த டி.வி., பூந்தொட்டி ஆகியவற்றை அடித்து நொறுக்கினார்கள்.
இதுபற்றிய தகவல் அறிந்து உருளையன்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் சிறுமியின் உறவினர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக டாக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த டாக்டரின் பெயர் விவரம் எதையும் போலீசார் வெளியிடவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.