புளியை உணவில் சேர்த்து கொள்வதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும்…!!

Read Time:3 Minute, 21 Second

tamarind-01-1467357865புளியை சேர்த்துக் கொள்ளாமல் தென்னிந்தியாவில் குறிப்பாக நம் தமிழ் நாட்டில் உணவுவகைகளே இல்லை. புளிக் குழம்பு, ரசம், சாம்பார், துவையல் என இதனை சேர்த்திடாத உணவு பதார்த்தங்கள் மிகக் குறைவு

இதன் புளிப்பு சுவை உணவில் ருசியை சேர்த்திடும். ஆனால் புளியை அதிகமாய் சாப்பிடக் கூடாதென்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது உண்மையல்ல. காரணம் காய்கறிகள் புளியுடன் வேகும்போது, காய்கறிகளின் சத்துக்கள் முழுவதும் நமக்கு கிடைக்கிறது.

காய்கறிகளின் சத்துக்களை நீர்த்துவிடாமல், அப்படியே இருக்கச் செய்வதில் புளியின் பங்கு உள்ளது. புளியினை உணவில் சேர்த்துக் கொள்வதால் உண்டாகும் நன்மைகளைப் பார்க்கலாம்.

மலச்சிக்கலை குணப்படுத்தும் :

புளியிலுள்ள சதைப்பகுதியில் அதிகமாய் நார்ச்சத்து உள்ளது. இவை மலச்சிக்கலை குணப்படுத்தும். அதிகப்படியான அமிலச் சுரப்பினை கட்டுப்படுத்தும்.

புளியங்கொட்டையின் மேலிருக்கும் பிரவுன் நிற தோல் வயிற்றுப் போக்கினை கட்டுப்படுத்தும். புளி ஜீரண சக்தியை மேம்படுத்தும்.

புற்று நோயை தடுக்கும் :

புளியிலுள்ள டார்டாரிக் அமிலம் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட். இது ஃப்ரீ ரேடிகல்ஸை அழிக்கிறது. குடலில் ஏற்படும் புற்று நோயை வராமல் காக்கிறது.

ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் : புளியில் அதிகமாக பொட்டாசியம் உள்ளது. இது ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான சோடியத்தை வெளியேற்றுகிறது.

இதனால் ரத்த அழுத்தம் சம நிலையில் இருக்கும்.

கொழுப்பை குறைக்கும் :

ரத்தத்தில் படியும் கொழுப்பினை கரைக்க உதவுகிறது. இதனால் இதய சம்பந்தமான நோய்கள் வராமல் காக்க முடியும்.

கண் பார்வையை அதிகரிக்கும் :

புளியில் விட்டமின் ஏ அதிகம் உள்ளது. கண்பார்வைத் திறனை மேம்படுத்தும் . வயதாவதன் காரணமாக வரும் மங்கலான பார்வை வர விடாமல் தடுத்து தெளிவான பார்வையைத் தரும்.

காயங்களை ஆற்றும் :

காயங்களில் புளிக் கரைசல் படும்போது வேகமாக ஆறிவிடும். இதிலுள்ள சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் சரும பாதிப்பின் மீது செயல் புரியும். இதனால் புண், காயம் வேகமாக ஆறி விடும். மேலும் இளமையான சருமம் பெற புளியை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேனி அருகே 4 பேரை மணந்து பணம் மோசடி செய்த பெண்…!!
Next post கற்பழிப்பு முயற்சியில் தப்பிக்க ஓடும் பஸ்சில் இருந்து குதித்து உயிர் பிழைத்த மாணவி: டிரைவர், கண்டக்டர் கைது…!!