சிறைச்சாலை காவலர்களை தாக்கிய இளைஞர்கள் கைது…!!
அநுராதபுரம் நகரில் தஹாய்யாகம பிரதேசத்தில் சிறைச்சாலை காவலர்களை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 21 தொடக்கம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என அநுராதபுர பொலிஸார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அநுராபுரம் சிறைச்சாலையில் சேவை புரியும் நான்கு காவலர்கள் முடி திருத்துவதற்காக சென்ற இடத்தில் வைத்தே இவ்வாறான தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தாக்குதலில் காயமுற்ற இரு சிறைச்சாலை காவலர்களும் நேற்று இரவு அநுராதபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.