தைவான் பெண்ணை மானபங்கபடுத்த முயற்சி: சீனாவில் 2 இந்தியர்கள் கைது…!!
இந்திய வியாபாரிகள் குழு ஒன்றை சீனாவில் உள்ள தேயிலை நிறுவனம் ஒன்று அழைத்திருந்தது. அதில் அரியானா மாநிலத்தை சேர்ந்த 2 பேரும் அடங்குவார்கள். அவர்களில் ஒருவருக்கு வயது 50. மற்றொருவருக்கு வயது 28. இவர்கள் இருவரும் கடந்த 7-ந் தேதி பீஜிங் நகரில் தாங்கள் தங்கி இருந்த கட்டிடத்தில் மின்தூக்கியில் (லிப்ட்) சென்றபோது, தைவானை சேர்ந்த பெண் சுற்றுலாப்பயணி ஒருவரை மானபங்கப்படுத்த முயற்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளன.
அதில் மின்தூக்கியில் தைவான் சுற்றுலாப்பயணியுடன் முதலில் படம் எடுத்துக்கொண்ட இந்தியர்கள் இருவரும், அந்தப் பெண்ணை மின்தூக்கியில் கீழே தள்ளினர். ஆனால் லிப்ட் உரிய இடத்தை அடைந்ததும் அந்தப் பெண் அதில் இருந்து வெளியேறினார். ஆனால் வயதான நபர், அந்தப் பெண்ணை உள்ளே இழுத்தார். அவரது இளம் நண்பர் மின்தூக்கியின் கதவை அடைத்தார். பின்னர் மின்தூக்கி, அவர்கள் தங்கி இருந்த 10-வது தளத்துக்கு சென்றது. இந்த நேரத்தில் அந்தப் பெண்ணை வயதான நபர் மானபங்கம் செய்ய முயற்சித்தார். ஆனால் அதை எதிர்த்து அந்தப் பெண் போராடினார்.
அதற்கிடையே மின்தூக்கி கீழே வந்ததும், அந்தப் பெண் ‘தப்பித்தோம், பிழைத்தோம்’ என வெளியே ஓடி வந்து தப்பினார். இவ்வளவும் ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
இது தொடர்பாக அந்தப் பெண்ணின் புகார், ரகசிய கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் 2 இந்தியர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 14-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.