தாதியரின் பிரச்சினைகளுக்கு தீர்வினைக் கோரி கையெழுத்து வேட்டை…!!

Read Time:1 Minute, 24 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)தாதியார்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வினைப் பெற்றுக்கொடுக்கக் கோரி கையெழுத்து பெறும் நிகழ்வானது இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலை முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கையெழுத்து பெறும் நிகழ்வு தேசிய வைத்தியசாலை தாதியர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், குறித்த மனுவில் கையெழுத்து பெறும் நடவடிக்கையானது நாடு பூராகவும் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை தாதியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தாதியர்களின் சம்பளப் பிரச்சினை, பதவி உயர்வு உள்ளிட்ட 17 பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்று தரக்கோரிய குறித்த கையெழுத்து பெறப்பட்ட மனுவை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கையளிக்கவுள்ளதாகவும் அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் வான் விபத்து! பெண் பலி, நால்வர் படுகாயம்…!!
Next post முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் பெறுமதியான செல்போன் திருட்டு! சந்தேக நபர் கைது..!!