முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் பெறுமதியான செல்போன் திருட்டு! சந்தேக நபர் கைது..!!
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஒருவருக்கு சொந்தமான 84 ஆயிரம் ரூபா பெறுமதியான செல்போனை திருடிச் சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த நபர் மொரட்டுமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். முல்லேரியாவை சேர்ந்த இந்த நபர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.