மொபட் மீது கார் மோதி விபத்து: 3 பேர் உடல் நசுங்கி பலி…!!
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள தாயம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 55). தோட்டத் தொழிலாளி. இவர் இன்று காலை தனது மனைவி குருவம்மாள் (50), பேத்தி கிருத்திகா (4) ஆகியோருடன் மொபட்டில் காங்கயம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
காலை 10.30 மணியளவில் காடையூர் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே கோவையில் இருந்து வந்த கார் மொபட் மீது மோதியது.
இதில் மொபட்டில் பயணம் செய்த ராஜன், குருவம்மாள், கிருத்திகா ஆகியோர் படுகாயம் அடைந்து தூக்கி வீசப்பட்டனர். சம்பவ இடத்திலேயே 3 பேரும் துடிதுடித்து பலியானார்கள். இது பற்றி தெரியவந்ததும் சம்பவ இடத்திற்கு காங்கயம் போலீசார் விரைந்து வந்து பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.