பேரூந்து கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி…!!
பஸ் கட்டணத்தை 6 வீதத்தால் உயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த கட்டண உயர்வு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் இந்த பஸ் கட்டண திருத்தம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஊடாக அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆகக் குறைந்த பஸ் கட்டணம் 8 ரூபாவிலிருந்து 9 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.