50 ஆவது விபத்து: ரயில் சேவை பாதிப்பு…!!
பண்டாரவளை-கொலதெண்ண புகையிரத குறுக்கு வீதியில் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் அந்தப் பகுதிக்கான ரயில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
இதன் காரணமாக பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதம் தற்போது பண்டாரவளை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், சீரமைப்பு பணிகள் துரிதமாக மேற்கொண்டு வருவதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
கொலதெண்ண புகையிரத குறுக்கு வீதியில் இதற்கு முன்னரும் பல தடவைகள் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவம் 50 வது தடவையாக இடம்பெற்றதாக கூறப்படுகிறது. .