40 இலட்சம் பெறுமதியான வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது…!!
சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான வல்லப்பட்டையுடன் 33 வயதுடைய பெண் ஒருவரை களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மீகஹதென்ன பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட இஹல ஹேவஸ்ஸ பகுதி உள்ள வீடொன்றில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வல்லப்பட்டை மீட்கப்பட்டுள்ளன.
4 ½ கிலோ எடை கொண்ட வல்லப்பட்டை இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
மத்துகம உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.