இளம்பெண்ணை கற்பழித்த காட்சிகளை பேஸ்புக்கில் வீடியோவாக வெளிட்ட இருவர் கைது…!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 17 வயது பெண்ணை கூட்டாக சேர்ந்து கற்பழித்ததுடன் அந்த வீடியோவை பேஸ்புக்கில் வெளிட்டவர்களில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், பாலியா மாவட்டத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை கடந்த மூன்றாம் தேதி கடத்திச் சென்று, பன்ஸ்டீ பகுதியில் கூட்டாக சேர்ந்த கற்பழித்த ஆறுபேர் அந்தப் பெண்ணை வேறு சிலருடனும் உடலுறவில் ஈடுபடும்படி வற்புறுத்தி வந்துள்ளனர்.
அவர்களது விருப்பத்தை அந்தப்பெண் மறுத்தால் ஏற்கனவே உன்னை நாங்கள் கற்பழித்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என்றும் அவர்கள் மிரட்டினர்.
அவர்களின் விருப்பத்துக்கு இணங்க தொடர்ந்து மறுத்து வந்ததால் அந்த இளம்பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட வீடியோ காட்சியை பேஸ்புக்கில் அவர்கள் வெளியிட்டனர். இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்திருந்த போலீசார், குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், குற்றவாளிகளில் இருவரான நவ்ஷாத் மற்றும் விரேந்தர் பாரதி ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்ததாக பாலியா மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார்.