ஆஸ்திரேலியாவில் சிறுவனை தூக்கி செல்ல முயன்ற கழுகு…!!
ஆஸ்திரேலியாவில் ஆலிஸ் ஸ்பரிங் பாலைவனப் பூங்காவில் வன விலங்குகள் கண்காட்சி நடந்தது. அதை கண்டுகளிக்க ஏராளமானோர் கூடியிருந்தனர் அப்போது அங்கு அசுர வேகத்தில் பறந்து வந்த ஒரு கழுகு தனது கூரிய கால்களின் நகங்களால் ஒரு சிறுவனை தூக்கி செல்ல முயன்றது.
அவனது தலையை தனது கால்களின் கூரிய நகங்களால் ஒரு சிறிய விலங்கு போல் பற்றி தூக்கியது ஆனால் முடியவில்லை. அதனால் ரத்த காயங்களுடன் சிறுவன் கதறி துடித்தான். உடனே அங்கு கூடியிருந்த மக்கள் தாக்குதல் நடத்தி கழுகிடம் இருந்து சிறுவனை மீட்டு சிகிச்சை அளித்தனர்.