23 வயதில் மூன்று திருமணங்கள் – குத்தி கொன்ற மாமனார்…!!
திருமணம் செய்து கொண்ட மனைவியை வீட்டில் இருந்து விரட்டி விட்டு கள்ள காதலியுடன் குடும்பம் நடத்திக்கொண்டு மற்றுமொரு யுவதியை திருமணம் செய்த இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மூன்றாவதாக திருமணம் செய்த யுவதியின் தந்தை கத்தியால் குத்தியதன் காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞன் கள்ள காதலியுடன் குடும்பம் நடத்தியதில் அவருக்கு ஒரு பிள்ளை இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை எல்ல உடஹராவ பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட யுவதியின் தந்தை, இந்த இளைஞனை தேடி அவர்களின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
வீட்டுக்கு சென்று சுமூகமாக உரையாடிக்கொண்டிருந்த யுவதியின் தந்தை திடீரென தான் கொண்டு வந்திருந்த ரம்போ கத்தியால், இளைஞரை குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த இளைஞன் பண்டாரவளை மற்றும் தியத்தலாவ வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி நான்கு நாட்களில் உயிரிழந்துள்ளார்.
23 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கத்தியால் குத்திய யுவதியின் தந்தை ஒரு அரச ஊழியர் எனவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.