தேனீக்கள் கொட்டியதில் 45 மாணவர்கள் பாதிப்பு..!!
திருகோணமலை சிறிபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜெயந்திவெவ மகா வித்தியாலய வளாகத்தில் இருந்த மரம் ஒன்றிலிருந்த தேனீக்கள் கலைந்து கொட்டியதால் 45 பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சிறிபுர கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஐவர் பதவிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஸ்ரீபுர பொலிஸார் தெரிவித்தனர்.