பள்ளி சிறுமி கடத்தி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது…!!

Read Time:3 Minute, 6 Second

201607141024351305_auto-driver-arrested-school-girl-kidnapped-and-molested_SECVPFதிருவனந்தபுரம் அருகே வெள்ளறடை பகுதியைச் சேர்ந்த உதயலால் (வயது 30), ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகி மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

உதயலாலுக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் அவரது மனைவி கணவரிடம் கோபித்துகொண்டு தாய் வீட்டிற்கு குழந்தையுடன் சென்று விட்டார்.

வெள்ளறடை பகுதியைச் சேர்ந்த ஒரு 13 வயது சிறுமி தினமும் உதயலாலின் ஆட்டோவில் பள்ளிக்கு செல்வது வழக்கம். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உதயலால் அந்த மாணவியை தனது ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.

அதன் பிறகு மாலையில் அந்த மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் மகளை தேடி பள்ளிக்கூடத்திற்கு சென்றனர். அப்போது அவர்கள் ஆட்டோ டிரைவர் உதயலாலுடன் அந்த மாணவி சென்றதாக தெரிவித்தனர்.

உதயலாலை தேடியபோது அவரும் மாயமாகி இருந்தார். மேலும் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அந்த மாணவியின் பெற்றோர் வெள்ளறடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் உதயலாலின் செல்போன் டவர் மூலம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர், விழுப்புரம் சொர்லூர் பகுதியில் இருப்பது செல்போன் சிக்னல் மூலம் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து கேரள போலீசார் விழுப்புரம் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள ஒரு வாடகை வீட்டில் ஆட்டோ டிரைவர் உதயலாலும் மாயமான பள்ளி சிறுமியும் இருந்தது தெரிய வந்தது.

அவர்கள் இருவரையும் போலீசார் வெள்ளறடைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது, அந்த மாணவி தன்னை உதயலால் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்ததாக கூறினார்.

இதை தொடர்ந்து உதயலாலை போலீசார் கைது செய்து நெய்யாற்றின்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். அந்த மாணவி மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு…!!
Next post இந்த உணவுகளில் எல்லாம் கொலஸ்ட்ரால் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?