பிரான்சின் நைஸ் பகுதியில் மக்கள் கூட்டத்திற்குள் கனரக வாகனம் புகுந்ததில் 73 பேர் உயிரிழப்பு: தீவிரவாத தாக்குதலா?

Read Time:1 Minute, 45 Second

201607150545463631_Nice-France-truck-attack-kills-73-official-tells_SECVPFபிரான்ஸ் நாட்டின் நைஸ் மாகாணத்தில் பாஸ்டில் தினம் எனப்படும் பிரான்ஸ் தேசிய தினத்தை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது நைஸ் மாகாணத்தின் முக்கிய சாலையில் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று திடீரென, ஒரமாக நின்று கொண்டிருந்த மக்கள் மீது மோதிச் சென்றது. சாலையோரமாக சுமார் 2 கிலோமீட்டர் தூரம் அந்த வாகனம் சென்றது. இதில் ஏராளமான மக்கள் சிக்கி நசுங்கினர்.

இந்த தாக்குதலில், சுமார் 73 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். கனரக வாகனத்தின் ஓட்டுநரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

கனரக வாகனத்தில் ஆயுதங்கள், கையெறி குண்டுகள் இருந்ததாக நைஸ் மாகாண தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தீவிரமான விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனங்களும், இரண்டு ஹெலிகாப்டர்களும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. ஏராளமான சடலங்கள் சாலையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த சம்பவம் பிரான்ஸ் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாக ரத்தினத்தை பாதுகாக்கும் நாகம்…. மிக மிக அரிய காட்சி…!! வீடியோ
Next post சிறந்த கணவனாக திகழ நீங்கள் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்…!!