பல மில்லியன் செலவில் பாரம்பரிய உணவகம் திறப்பு…!!
கிளிநொச்சி மாவட்ட விவசாயத் திணைக்கள வளாகத்தில் அமைக்கப்பட்ட பாராம்பரிய உணவுப்பொருட்கள் மற்றும் விவசாயப் பொருட்களின் விற்பனை நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
வடமாகாண விவசாய அமைச்சின் 2014ஆம் 2015ஆம் ஆண்டுகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் இருந்து, 5.5 மில்லியன் ரூபாய் செலவில் அம்மாச்சி உணவகம் நிர்மாணிக்கப்பட்டது.
பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் விவசாய விரிவாக்கச் செயற்பாடுகள் விவசாய பொருட்களின் விற்பனைக்கூடம் என்பன உள்ளடக்கிய அம்மாச்சி உணவகம், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் திறந்து வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, வை.தவநாதன் மற்றும் அமைச்சின் செயலாளர் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உயர் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.