அரியவகை மீன்குஞ்சுகள் கடத்தல்..!!
நக்கல்ஸ் சுற்றாடல் பகுதிக்குரிய அரிய வகை மீன் இனமான தும்பர பெத்தியா என்ற மீன் இனத்தின் 25 மீன் குஞ்சுகளை இரகசியமான முறையில் வனப் பகுதியில் இருந்து எடுத்துச் செல்ல முயற்சித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நக்கல்ஸ் வன பாதுகாப்பு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லக்கல நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இவர்கள், குற்றத்தை ஒப்புக்கொண்டதால், தலா 40 ஆயிரம் ரூபா என்ற கணக்கில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் கண்டி, அக்குரணை பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.