பெரம்பூரில் போலீஸ்காரர் ஆசிட் குடித்து தற்கொலை முயற்சி..!!
பெரம்பூர் பந்தர்கார்டன் 2-வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (26). ஆயுதப்படை போலீஸ்காரர். இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு திருமணம் ஆகி 5 மாதம் ஆகிறது. மணிகண்டனின் தாயும் அவருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் மணிகண்டனின் அக்கா மகளுக்கு காது குத்தும் விழா ராமநாதபுரத்தில் நடைபெற இருந்தது. மணிகண்டன் குடும்பத்துடன் சேர்ந்து செல்லாம் என்று கூறி இருந்தார். தாய் இதனை கேட்காமல் தனியாக சென்று விட்டார்.
இதனால் மனம் உடைந்த அவர் நேற்றிரவு வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உக்கிரபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.