நெற்குன்றத்தில் கணவரின் குடிப்பழக்கத்தில் மனைவி தற்கொலை…!!
கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் சி.பி.எல். நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சின்னராஜன். இவரது மனைவி தேவகி (20). இவர்களுக்கு திருமணமாகி 1½ வருடம் ஆகிறது. சொந்த ஊர் திண்டுக்கல் ஆகும்.
சின்னராஜனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு சின்னராஜன் நகையை அடகு வைத்து செலவு செய்தது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் மனம் உடைந்த தேவகி, கணவர் வெளியில் சென்ற நேரம் பார்த்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தேவகியின் தாய் கோயம்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்ன ராஜனை கைது செய்தனர்.