புரோஸ்டேட் புற்று நோயின் பக்க விளைவுகளை குறைப்பது எது தெரியுமா?

Read Time:2 Minute, 46 Second

kidney-15-1468579478யோகாவின் அற்புதங்கள் பற்றி இன்று உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. வெளி நாட்டவர்கள் இதை செய்யவும் தொடங்கியாயிற்று.

உடலில் ஏற்படும் நோய்களை விரட்டியடிக்கும் சக்தி யோகாவிற்கு உண்டு என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் புற்று நோயின் பக்கவிளைவுகளை யோகா குறைக்கும் என்பதை அறிவீர்களா?

புரோஸ்டேட் புற்று நோய் ஆண்களுக்கான வரும் நோய். இது கல்லீரலுக்கு அடுத்ததாக ஆண்களை அதிகம் தாக்கும் புற்று நோயாகும்.

இந்த புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் சக்தி வாய்ந்த சிகிச்சைகளால், நிறைய பக்க விளைவுகள் உண்டாகும்.

சிறு நீர் கழிக்க கடினமாக இருக்கும், மன அழுத்தம், தாங்க முடியாத உடல் வலி, விறைப்புத் தன்மை என நிறைய பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு.

அவ்வாறு பாதிக்கப்பட்ட புற்று நோயாளிகள் யோகா செய்வதினால், பல்வேறு உபாதைகளிலிருந்து விடுதலை கிடைக்கிறது என்று ஆய்வு கூறுகின்றது.

2013- 2014 வரை நடத்தப்பட்ட ஆய்வில், ப்ரோஸ்டேட் புற்று நோயாளிகளுக்கு வாரம் இருமுறை 75 நிமிடங்களுக்கு யோகா கற்றுத் தரப்பட்டது.

இதில் உடல் மற்றும் மனம் சம்பந்தமான முன்னேற்றம் எல்லா நோயாளிகளிடமும் பார்க்க முடிந்தது என்று அமெரிக்காவிலுள்ள அப்ராம்ஸன் புற்று நோய் மையத்தின் யோகா பயிற்சியாளர் டாலி மஜார் கூறியுள்ளார்.

ஒவ்வொரு யோகா வகுப்பு முடிந்ததும் அடுத்தவகுப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக நோயாளிகள் கூறினர். முக்கிய பிரச்சனையான சிறு நீர் தடையில்லாமல் கழிக்க முடிந்தது. விறைப்புத்தன்மையும் குறைந்தது.

உடல் பலம்பெற்று, புத்துணர்வு பெற்றதாக கூறி வந்துள்ளனர். மேலும் இவர்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து தசைகளும் வலுப்பெற்றது என்று இந்திய வம்சாவளியான நேஹா என்ற மருத்துவர் கூறுகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு மனுஷனை கை தனியா கால் தனியா இப்படி பிச்சிட்டாங்களே..!! வீடியோ
Next post உண்மையான முஸ்லிம் தலைமையின் இலட்சணங்கள்..!!