மது அருந்தி விட்டு தகராறு செய்த இராணுவ சிப்பாய் கைது…!!
மது அருந்திவிட்டு ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்ட குற்றத்திற்காக இராணுவ சிப்பாய் ஒருவரை கருவலகஸ்வேவ பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
புத்தளம் – கருவலகஸ்வேவ பொலிஸ் அவசர பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய், பருத்தித்துறை இராணுவ முகாமைச் சேர்ந்தவர் என அறியமுடிகின்றது.
குறித்த நபரை சோதனை செய்வதற்காக புத்தளம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாயை புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த இருப்பதாகவும், குறித்த நபரிடம் இருந்து மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் கருவலகஸ்வேவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.