இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்..!!
நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை நிலவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அத்துடன், மழையின் போது தற்காலிகமாக கடும் காற்று மற்றும் இடியும் ஏற்படக்கூடும் என அந்த திணைக்களத்தின் வளிமண்டல ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.