உடுமலை ராணுவ பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவன் பலி..!!

Read Time:4 Minute, 14 Second

201607161056461168_student-dies-after-took-food-at-udumalai-army-school_SECVPFதிண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் விஜயராகவன். இவரது மகன் சித்தார்த் (11). இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி நகரில் உள்ள சைனிக் ராணுவ பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

மாணவர் சித்தார்த் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை மாணவர் சித்தார்த் காலை உணவும் சாப்பிட்டுள்ளார்.

மாணவர் சித்தார்த் சாப்பிட்ட சிறிது நேரத்தில் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து பள்ளி முதல்வர் கேப்டன் ஸ்ரீதரன், நிர்வாக அதிகாரி பிரசாத் மற்றும் ஆசிரியர்கள் விரைந்து வந்து மாணவரை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அப்போது பரிசோதனை செய்த டாக்டர் சவுந்தரராஜன் மாணவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதை கேட்டு பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மாணவர் சித்தார்த் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் பள்ளியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவன் சித்தார்த் இறந்தது குறித்து தகவல் கிடைத்ததும் அவனது தந்தை விஜயராகவன் மற்றும் அவரது மனைவி, உறவினர்கள் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். சித்தார்த் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

பின்னர் மாணவன் சித்தார்த் உடலை கோவை மருத்து கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே சித்தார்த்தின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவனது பெற்றோர், உறவினர்கள் உடுமலை பழைய பஸ் நிலையம் முன்பு திடீர் மறியல் செய்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் உடுமலை ஆர்.டி.ஓ. சாதனை குறள் தாசில்தார் தயானந்தன், டி.எஸ்.பி. விவேகானந்தன், ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் மேலும் 23 மாணவர்களுக்கு நேற்று இரவு திடீரென வாந்தி ஏற்பட்டது. உடனே அவர்கள் அனைவரும் உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் 10 மாணவர்கள் டிஸ்சார்ஜ் ஆகி விடுதிக்கு சென்றனர்.

மேலும் 5 மாணவர்கள், வாந்தி காரணமாக இன்று உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் 14 மாணவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த சம்பவம் பற்றி கலெக்டர் ஜெயந்தி, பொள்ளாச்சி மகேந்திரன் எம்.பி., சுகாதார இணை இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதற்கிடையே ராணுவ பள்ளியில் மாணவன் சித்தார்த் இறந்ததையொட்டியும், மேலும் 14 மாணவர்கள் சிகிச்சை பெற்று வருவதாலும் வருகிற 24-ந் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை விடப்படுவதாக முதல்வர் கேப்டன் ஸ்ரீதரன் அறிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேலத்தில் ராக்கிங் கொடுமை: மாடியில் இருந்து குதித்த மாணவர்…!!
Next post புற்றுநோயால் உயிரிழக்கபோகும் செல்ல நாய்க்கு நாட்டை சுற்றி காட்டிய அமெரிக்கர்..!!