ஏ சி இல்லாமலேயே வீடு குளு குளுவென்று இருக்க வேண்டுமா?

Read Time:2 Minute, 44 Second

house_ac_002.w540வருடத்தின் நான்கு மாதங்கள் சுட்டெரிக்கும் சூரியனின் வெப்ப கதிர்களால் நமது உடல் நலன் பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அனைத்து கட்டிட அமைப்புகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. வெளிப்புற சூழ்நிலையில் நிலவும் வெப்பமும், கட்டமைப்புகளுக்கு உட்புறமாக நிலவும் வெப்பமும் வெவ்வேறு அளவுகளில் இருக்கின்றன. அதனால் கட்டுமானங்கள் சுருங்கி விரியும் தன்மைக்கு உள்ளாகின்றன. வீட்டுக்குள்ளும் வெப்ப அலைகள் நம்மை பாதிக்கின்றன.

கட்டுமானத்தின் ஆரம்ப நிலையில் சில எளிமையான வழிகளை கடைப்பிடிப்பதன் வாயிலாக வீட்டுக்குள் ‘குளுகுளுவென்ற’ சூழ்நிலையை உண்டாக்கலாம். அதற்காக கட்டுமான வல்லுனர்கள் தரும் எளிய ‘டிப்ஸ்களை’ இங்கே பார்க்கலாம்.

• வீட்டின் கூரை நல்ல உயரத்தில் இருப்பதுபோல அமைக்கப்படவேண்டும்.

• மேற்கூரைக்கு கீழே உள்ள சுவரில் காற்றோட்ட வசதிக்காக பல துளைகள் போடப்பட்டிருப்பது முக்கியம்.

• வெயில் அதிகமாக படக்கூடிய அறையின் மேற்கூரைக்கு கீழாக ‘எக்ஸ்ஹாஸ்ட் பேன்’ பொருத்தினால் கீழே இருக்கும் ஜன்னல்கள் வழியாக வெளிப்புற குளிர் காற்று வீட்டுக்குள் வர வசதியாக இருக்கும்.

• வீட்டின் திசை அமைப்புக்கு தக்கபடி காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரையில் சூரிய வெப்பம் எந்த கோணத்தில் விழுகிறது என்பதை கவனித்து, அதற்கேற்ப மேற்கூரைகளை தகுந்த அளவுக்கு வெளியில் நீட்டி விடலாம்.

• வீட்டுக்கு வெளிப்புறம் பூசப்பட்ட வர்ணங்கள் சூரிய வெப்பத்தை பிரதிபலிப்பது போல இருக்க வேண்டும். அதனால் வெப்பம் வீட்டுக்குள் ஈர்ப்பது தவிர்க்கப்படும்.

• சூரிய வெப்பம் நேரடியாக விழும் இடங்களில் மாடிப்படிகள், வாகன நிறுத்துமிடங்கள், பயன்பாடு குறைவாக உள்ள இடங்கள் ஆகியவற்றை அமைக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல்லடம் அருகே பாறைக்குழியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி…!!
Next post உ.பி.யில் விஷச்சாராயத்துக்கு 17 பேர் பலி: பலர் கவலைக்கிடம்…!!