பாழடைந்த குடோனில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்…!!
புதுவண்ணாரப்பேட்டை பீச் ரோட்டில் பாழடைந்த குடோன் உள்ளது. இங்கிருந்து கடும் துர்நாற்றம் வீசியது. குடோன் அருகில் இருந்த கட்டிடத்தின் காவலாளி புது வண்ணாரப்பேட்டை போலீ சுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் குடோனை சோதனை செய்தபோது 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணமாக கிடந்தார்.
அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. உடலை கைப்பற்றி ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர் யார் என்று தெரியவில்லை. அவரை யாராவது கொலை செய்து வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.