திருவள்ளூரில் ஆசிரியர்கள் வீடுகளில் 81 பவுன் நகை கொள்ளையடித்த 3 பேர் கைது…!!

Read Time:2 Minute, 30 Second

201607171315101993_Tiruvallur-81-Bowen-in-jewelry-robbery-of-teachers-houses_SECVPFதிருவள்ளூர் கண்ணதாசன்நகர் அண்ணா தெருவை சேர்ந்தவர் முனுசாமி (54). இவர் ஊத்துக்கோட்டை அருகே வெள்ளாத்துக்கோட்டையில் உள்ள அரசினர் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி பிரமிளா(49). இவரும் திருவள்ளூரை அடுத்த ராமதண்டலத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி இவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 75 பவுன் தங்கநகை, ரூ.1½ லட்சம் திருடப்பட்டது. இதுகுறித்து முனுசாமி திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சனேயபுரம் 12-வது தெருவை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி புவனேஸ்வரி. அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் ரொக்கப்பணம் ரூ.50 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து ராம்குமார் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து, குற்றவாளிகளை கண்டுபிடிக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர், தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இதில் திருட்டு வழக்கில் தொடர்புடைய சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (46) ஸ்ரீபெரும்புதூர் கிரிபாபு(31) சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த தங்கம் என்கிற கனிஷ் (19) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 81 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பண்ருட்டி அருகே இடிதாக்கி வாலிபர் பலி…!!
Next post மருந்து அட்டைகளில் இந்த எம்ப்டி ஸ்பேஸ் எதற்கு தரப்படுகிறது என தெரியுமா?