துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் சுட்டுக்கொலை…!!
அம்பலாங்கொட பட்டிவத்த – வத்துகென்தர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று இடம்பெற்ற இந்த துப்பாக்கி பிரயோகத்தில் வியாபாரி ஒருவரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் திட்டமிடப்பட்ட கொலையாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் அம்பலாங்கொட பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
பம்பலப்பிட்டியவில் வியாபாரியொருவர் சுட்டுக்கொலை
பம்பலபிட்டியவில் வியாபாரியொருவர் இன்று காலை இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மாதுவ சரத் என்னும் வியாபாரியொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.